ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டி20 உலகக் கோப்பை ஒத்திவைப்பு: ஐசிசி அதிகாரபூர்வ அறிவிப்பு

​ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

News image
​ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Updated On :20 ஜூலை 2020, 2:52 pm

DIN


ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படும் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகள் நடைபெறவுள்ள ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் பற்றிய தேதிகளையும் ஐசிசி அறிவித்துள்ளது. 

இதன்படி, 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 14, 2021-இல் நடைபெறுகிறது.

2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 13, 2021-இல் நடைபெறுகிறது.

2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 26, 2023-இல் நடைபெறுகிறது.

ஐசிசியின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்புக்காகத்தான் பிசிசிஐ காத்திருந்தது. எனவே, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.