ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: ஐபிஎல் தலைவர்
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.


கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருவதால், மீண்டும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருவதால், இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியா அல்லாது வெளிநாடுகளில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
எனினும், இந்த ஆண்டு ஐசிசியின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரும் நடைபெறவிருந்ததால், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான அட்டவணையில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, டி20 உலகக் கோப்பை நடத்துவது பற்றிய ஐசிசியின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக பிசிசிஐ காத்திருந்தது. இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த 2020-ம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி நேற்று அறிவித்தது. எனவே, ஐபிஎல் தொடர் குறித்த பிசிசிஐயின் அதிகாரபூர்வ அறிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், 2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது:
"கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. அரசின் அனுமதியைக் கோரியிருக்கிறோம். இதுபற்றி மேலும் ஐபிஎல் ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்." என்றால் பிரிஜேஷ் படேல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...