டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம்: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்

ஐபிஎல் போட்டியில் விளையாட நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2020, 11:31 am

DIN

ஐபிஎல் போட்டியில் விளையாட நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஐபிஎல் போட்டி செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் நடைபெறுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ முதலில் அறிவித்தது. 

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐபிஎல் போட்டியில் விளையாட நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஏராளமான ரசிகர்களை ஈர்க்கும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது நல்ல அனுபவம். ஐபிஎல்-லில் விளையாடுவதும் அதில் பங்கேற்பதும் எனக்கு விருப்பமானவை. ஆனால் இன்னும் பல தகவல்கள் நமக்கு வரவேண்டும். அதற்குப் பிறகுதான் இறுதி முடிவை எடுக்க முடியும். எந்தவொரு கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் அது பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது முக்கியம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.