டி20 உலகக் கோப்பை போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்கு பிசிசிஐ தான் காரணம்: சோயிப் அக்தர் குற்றச்சாட்டு
டி20 உலகக் கோப்பை போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்கு பிசிசிஐ தான் காரணம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார்.


டி20 உலகக் கோப்பை போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்கு பிசிசிஐ தான் காரணம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்கு பிசிசிஐ தான் காரணம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
ஆசியக் கோப்பை நடந்திருக்கலாம். இதனால் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்த்து விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கும். அப்போட்டி ரத்தானதற்குப் பல காரணங்கள் உள்ளன.
டி20 உலகக் கோப்பை கூட நடந்திருக்கலாம். ஆனால் அதை நடத்த விடவில்லை. ஐபிஎல் போட்டிக்குப் பாதிப்பு வரக்கூடாது. அவர்களுக்கு உலகக் கோப்பைப் போட்டி எப்படிப் போனால் என்ன என்று கூறியுள்ளார்.a
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...