நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலகக் கோப்பை சூப்பர் லீக்: ஐசிசியின் அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜூலை 30 முதல் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கிடையே இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடர்...

News image
Updated On :27 ஜூலை 2020, 7:03 am

DIN

உலகக் கோப்பை சூப்பர் லீக்கை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

ஜூலை 30 முதல் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கிடையே இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடர், சூப்பர் லீக்கின் முதல் தொடராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச் சுற்றாக இது கருதப்படும். 

உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் 12 முழு உறுப்பினர்களும் நெதர்லாந்தும் பங்கேற்கின்றன.

அனைத்து அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட நான்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும். 

இதில் முதல் ஏழு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2023 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்தியா, தானாகத் தகுதியடைந்துள்ளது. ஆக, 8 அணிகள் இதிலிருந்து தேர்வாகிவிடும்.

நேரடியாகத் தகுதி பெறாத அணிகள், 5 அசோசியேட் அணிகளுடன் இணைந்து தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்கும். இதிலிருந்து 2 அணிகள் தேர்வாகும்.

2023 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.