கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி ரத்தாகவுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 37,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி ரத்தாகவுள்ளது.
ஜெர்மன் டென்னிஸ் சங்கத்தின் துணைத்தலைவர் அளித்த பேட்டியில், இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வது குறித்த முடிவு புதன்கிழமை எடுக்கப்படும். இதில் சந்தேகமேயில்லை. இன்றைய சூழலில் இது அவசியமானது. பயணக்கட்டுப்பாடுகள் நிலவும் நிலையில் உலகம் முழுவதும் இருந்து வீரர்களும் ரசிகர்களும் லண்டனுக்கு வருவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
மே மாதம் நடைபெறுவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி, செப்டம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல ஜுன் 29 அன்று தொடங்குவதாக இருந்த விம்பிள்டன் போட்டியை ஒத்திவைக்க முடியாது, இதனால் உலகப் போர்களுக்காக அல்லாமல் வேறு காரணத்துக்காக முதல்முறையாக விம்பிள்டன் ரத்து செய்யப்படுகிறது. முதலாம் உலகப் போரினால் 1915-18 வரை விம்பிள்டன் நடைபெறவில்லை. இரண்டாம் உலகப் போரினால் 1940-45 வரை மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


