பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

இந்த நாட்டில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை: ரோஹித் சர்மா வியப்பு

இந்தியாவிலும் வங்கதேசத்திலும் உணர்ச்சிமிக்க ரசிகர்கள் உள்ளார்கள். நாம் தவறு செய்யும்போது...

News image
Updated On :16 மே 2020, 11:33 am

DIN

இந்திய கிரிக்கெட் அணி எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குள்ள இந்தியர்கள் மட்டுமல்லாமல் அந்த நாட்டவர்களும் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள சில மைதானங்களில் உள்ளூர் அணியை விடவும் இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைத்த தருணங்கள் எல்லாம் உண்டு.

ஆனால், வங்கதேசத்தில் மட்டும் எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைப்பதில்லை என ஆதங்கப்படுகிறார் ரோஹித் சர்மா. வங்கதேச வீரர் தமிம் இக்பாலுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் ரோஹித் சர்மா கூறியதாவது:

இந்தியாவிலும் வங்கதேசத்திலும் உணர்ச்சிமிக்க ரசிகர்கள் உள்ளார்கள். நாம் தவறு செய்யும்போது எல்லா முனைகளிலிருந்தும் கண்டிப்பார்கள். வங்கதேசத்தில் விளையாடச் செல்லும்போது நம்பமுடியாத காட்சியாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவின்றி இந்திய அணி எங்கும் விளையாடுவதில்லை. ஆனால் வங்கதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போதுள்ள வங்கதேச அணி வீரர்களான நீங்கள் அனைவரும் மிகவும் தீவிரமாக விளையாடுகிறீர்கள். 2019 உலகக் கோப்பையில் அனைவரும் அதைப் பார்த்தார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.