குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சச்சினைத் தொடர்ந்து கீப் இட் அப் சவாலை ஏற்றுக்கொண்ட ரோஹித் சர்மா & ரஹானே

ஆடுகளத்தில் பல புயல்களைக் கண்டவர் சச்சின். அவரிடம் இந்த எளிய சவாலைத் தரலாமா...

News image
Updated On :18 மே 2020, 12:33 pm

DIN

கீப் இட் அப் என்கிற புதிய சவாலைத் தொடங்கி வைத்துள்ளார் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்.

கிரிக்கெட் மட்டையின் விளிம்புப் பகுதியில் பந்துகளை விடாமல் தட்டிக்கொண்டே இருக்கவேண்டும். முதலில் இதைச் செய்து விடியோவை வெளியிட்ட யுவ்ராஜ் சிங் - சச்சின், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோருக்குச் சவால் விடுத்தார்.

ஆடுகளத்தில் பல புயல்களைக் கண்டவர் சச்சின். அவரிடம் இந்த எளிய சவாலைத் தரலாமா?

இதனால் இதை வைத்து ஒரு வேடிக்கை காண்பித்தார் சச்சின். கண்களைக் கருப்புத் துணியால் மூடிக்கொண்டு கிரிக்கெட் மட்டையால் பந்துகளைத் தட்டிக்காண்பித்து ஆச்சர்யத்தை உண்டாக்கினார். ஆனால் அதே விடியோவில் அதன் ரகசியத்தையும் வெளியிட்டார். கருப்புத் துணியாக இருந்தாலும் அதில் ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் மறு பக்கம் தெளிவாகத் தெரிந்தது. விடியோவின் கடைசியில் இதைச் சொல்லி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார் சச்சின். பிறகு இந்தச் சவாலை அப்படியே யுவ்ராஜுக்கும் திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து ரோஹித் சர்மாவும் ரஹானேவும் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு இதன் விடியோக்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.