சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய பரிசோதனையில் எந்தவொரு சிஎஸ்கே வீரருக்கும் கரோனா இல்லை!

செப்டம்பர் 4 முதல் பயிற்சியைத் தொடங்குவோம் என சிஎஸ்கேவின் தலைமைச் செயல் அதிகாரி...

News image
Updated On :1 செப்டம்பர் 2020, 10:48 am

DIN

சமீபத்திய பரிசோதனையில் எந்தவொரு சிஎஸ்கே வீரருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

கடந்த வாரம், இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்ட அடுத்தக்கட்டப் பரிசோதனையில் எந்தவொரு சிஎஸ்கே வீரருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று வந்த சிஎஸ்கே அணியில், 13 பேருக்கு கரோனா உறுதியானதால் தங்களுடைய தனிமைப்படுத்துதல் காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. திங்கள் அன்று எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனைகள் சிஎஸ்கே அணிக்குச் சாதகமாகவே வந்துள்ளது. தற்போது, அடுத்தக்கட்டப் பரிசோதனையிலும் யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானால் செப்டம்பர் 4 முதல் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியை ஆரம்பிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மற்ற அணிகள் போல கரோனாவால் சிஎஸ்கே அணியும் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் கடந்த ஆகஸ்ட் 28 அன்றே பயிற்சியை ஆரம்பித்திருக்கும்.

செப்டம்பர் 3 அன்று அடுத்தப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு செப்டம்பர் 4 முதல் பயிற்சியைத் தொடங்குவோம் என சிஎஸ்கேவின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் விளையாடவும் சிஎஸ்கே அணி தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.