மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

டி20 தரவரிசையில் முதலிடம் பெற்ற ஆஸ்திரேலிய அணி!

கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தை மீண்டும் அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

News image
Updated On :9 செப்டம்பர் 2020, 6:40 am

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியடைந்த போதிலும் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தை மீண்டும் அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகின்றன. டி20 தொடர் செளதாம்ப்டனில் நடைபெற்றுள்ளன. ஒருநாள் தொடர் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளன. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. 2-வது டி20 ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

3-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எனினும் டி20 தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றுள்ளது.

முதல் இரு டி20 ஆட்டங்களில் வென்றதன் மூலம் டி20 தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு இணையாக 273 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. 

இந்நிலையில் 3-வது டி20 ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியை அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 275 புள்ளிகளுடன் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி 271 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் இந்திய அணி 266 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.