சிஎஸ்கே அணியில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் இணைகிறாரா?: காசி விஸ்வநாதன் பதில்
சிஎஸ்கே அணியில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் இணையவுள்ளதாக வெளியான தகவலை...


சிஎஸ்கே அணியில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் இணையவுள்ளதாக வெளியான தகவலை சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுரேஷ் ரெய்னாவுக்குப் பதிலாக மலானைத் தேர்வு செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.
பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 66, 42, 21 ரன்கள் எனச் சிறப்பாக விளையாடினார். இதுவரை விளையாடிய 16 டி20 ஆட்டங்களில் 682 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 48.71, ஸ்டிரைக் ரேட் - 146.66. இதையடுத்து 877 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
எனினும் டேவிட் மலான் பற்றிய தகவலை சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:
இத்தகவல் எனக்குப் புதிதாக உள்ளது. அணியில் சேர்க்கவேண்டிய வெளிநாட்டு வீரர்கள் அனைவரையும் தேர்வு செய்துவிட்டோம். எனவே எங்கள் அணியில் இன்னொரு வெளிநாட்டு வீரரை எப்படித் தேர்வு செய்யமுடியும் எனத் தெரியவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...