ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கி., சுழற்பந்துவீச்சாளர்: ரஷித் சாதனை

​ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அடில் ரஷித் பெற்றுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கி., சுழற்பந்துவீச்சாளர்: ரஷித் சாதனை


ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அடில் ரஷித் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் பேட் செய்து வரும் அந்த அணி சற்றுமுன் வரை 43 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இதில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அவர் எட்டினார். அதேசமயம், 150 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இவர் இதை 102 ஒருநாள் ஆட்டங்களில் எட்டியுள்ளார்.

இங்கிலாந்து சார்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளராக ஸ்வான் இருந்தார். அவர் 79 ஆட்டங்களில் 104 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து சார்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஆண்டர்சன் (269 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக டேரன் கோவ் (234), ஸ்டுவர்ட் பிராட் (178), ஆண்ட்ரூ பிளின்டாப் (168) ஆகியோர் உள்ளனர். இந்த வரிசையில் இவர்களுக்கு அடுத்தபடியாக தற்போது ரஷித் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com