நசும் சுழலில் சுருண்டது ஆஸி.: 23 ரன்களில் வங்கதேசம் அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம், ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 ஆட்டம் டாக்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.
132 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் கேரி மற்றும் ஜோஷ் பிலிப்பி களமிறங்கினர். மெஹதி ஹசன் வீசிய முதல் பந்திலேயே கேரி ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு எந்த பேட்ஸ்மேன்களும் வங்கதேச சுழலுக்குத் தாக்குப்பிடிக்கவில்லை. மிட்செல் மார்ஷ் மட்டும் அதிகபட்சமாக 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். கேப்டன் மேத்யூ வேட் 13 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் 10 ரன்களைக் கூட தொடவில்லை.
20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், வங்கதேச அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச தரப்பில் நசும் அகமது 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிஸூர் ரஹ்மான் மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளையும், மெஹதி ஹசன் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...