புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டிஎன்பிஎல்: நெல்லை வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2021, 7:40 pm

DIN

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது.

டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்துவீச, பேட் செய்த திண்டுக்கல் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய நெல்லை 18.5 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக ராஜாமணி ஸ்ரீனிவாசன் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 60, மணி பாரதி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 30 ரன்கள் சோ்க்க, நெல்லை பௌலிங்கில் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் நெல்லை இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் பாபா அபராஜித் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 44, சஞ்சய் யாதவ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 31 ரன்கள் அடித்தனா். திண்டுக்கல் தரப்பில் ரங்கராஜ் சுதேஷ், லஷ்மிநாராயணன் விக்னேஷ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.