பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

62 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா: கடைசி டி20யிலும் வங்கதேசம் வெற்றி

ஆஸ்திரேலியாவை கடைசி டி20 ஆட்டத்தில் 62 ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2021, 3:17 pm

DIN


ஆஸ்திரேலியாவை கடைசி டி20 ஆட்டத்தில் 62 ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கடைசி டி20 ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்த ஆட்டமும் குறைந்த ஸ்கோர் ஆட்டமாக அமைந்தது. இதனால், முகமது நயீம் 23 ரன்கள் எடுத்ததே வங்கதேசத்தின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் எல்லிஸ் மற்றும் டேன் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகார், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

123 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களாக டேன் கிறிஸ்டியன் மற்றும் கேப்டன் மேத்யூ வேட் களமிறங்கினர்.

ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக வேட் 22 ரன்களும், பென் மெக்டெர்மாட் 17 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் 10 ரன்களைக்கூட தொடவில்லை.

இதனால், ஆஸ்திரேலிய அணி 13.4 ஓவர்களில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும், முகமது சயிஃபுதின் 3 விக்கெட்டுகளையும், நசும் அகமது 2 விக்கெட்டுகளையும், மகமதுல்லா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன்மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.