டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அயோத்திக்கு வாங்க: பி.வி. சிந்துவின் கொரியப் பயிற்சியாளரிடம் மோடி

அயோத்தியின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்றார். 

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 11:19 am

DIN

அயோத்தியை நீங்கள் பார்வையிட வேண்டும் என்று பாட்மிண்டன் வீராங்கனை சிந்துவின் பயிற்சியாளர் பார்க்கிடம் கூறியுள்ளார் மோடி.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற இந்திய அணியினரை திங்கள்கிழமை தனது இல்லத்துக்கு அழைத்து விருந்தளித்த பிரதமா் நரேந்திர மோடி, ஒலிம்பிக்ஸில் அவா்களது பங்களிப்புக்காகப் பாராட்டு தெரிவித்தாா். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட பதக்கம் வென்ற அனைத்து போட்டியாளா்களிடமும் உரையாடி அவா்களுக்குப் பாராட்டு தெரிவித்த பிரதமா் மோடி, இதர போட்டியாளா்களின் ஒலிம்பிக்ஸ் அனுபவத்தைக் கேட்டறிந்து அவா்களையும் உற்சாகப்படுத்தினாா். அப்போது பாட்மிண்டன் வீராங்கனை சிந்துவின் பயிற்சியாளர் பார்க்கிடம் மோடி கூறியதாவது:

கொரியாவுக்கும் அயோத்திக்கும் முக்கியமான தொடர்பு உள்ளது. கடந்த முறை உங்கள் நாட்டு அதிபரின் மனைவி, அயோத்திக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நீங்களும் அயோத்திக்குச் செல்லவேண்டும். அதன் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்றார். 

2018 நவம்பரில் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில், தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜுங்-சூக், இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து பங்கேற்றார். இதற்காக, அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.  முன்னதாக, அயோத்தியிலுள்ள ராணி ஹியூ-வின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். ராணி ஹியூ, அயோத்தியில் இருந்து கொரியாவுக்குச் சென்று, அந்நாட்டு அரசரை மணம்புரிந்ததாக வரலாறு கூறுகிறது. அவரது நினைவிடத்தை அழகுபடுத்தும் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கிம் ஜுங்-சூக், பின்னர் ராம் கத் பூங்காவில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, ராமர், சீதை, லட்சுமணர் வேடமணிந்த கலைஞர்கள், அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.  சரயு நதிக்கரையில் 3 லட்சம் தீபங்கள் ஏற்றும் தீபோற்சவம் நிகழ்விலும் அவர் பங்கேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.