கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ராகுல், சிராஜ் பெரும் முன்னேற்றம்

​ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், முகமது சிராஜ் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 11:57 am

DIN


ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், முகமது சிராஜ் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, ஐசிசி டெஸ்ட் தரவரிசை புதன்கிழமை வெளியிடப்பட்டது. 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கியப் பங்காற்றிய ராகுல் மற்றும் சிராஜ் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

பேட்டிங்குக்கான தரவரிசையில் ராகுல் 19 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சுக்கான தரவரிசையில் சிராஜ் 18 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் எடுத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் (893 புள்ளிகள்) பிடித்துள்ளார். முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் ஜோ ரூட்டுக்கும் இடையே 8 புள்ளிகளே வித்தியாசம்.

பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். மார்க் வுட் 5 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.