ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் யார்?: தொடரும் குழப்பம்

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்கிற குழப்பம் தொடர்ந்து வருகிறது.

News image
ஸ்ரேயஸ் ஐயர்
Updated On :19 ஆகஸ்ட் 2021, 12:16 pm

DIN

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்கிற குழப்பம் தொடர்ந்து வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் ஃபீல்டிங் செய்தபோது அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களில் இருந்தும் ஷ்ரேயஸ் ஐயர் விலகினார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

ஏப்ரல் மாதத்தில் தோள்பட்டைக் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ஷ்ரேயஸ் ஐயர். தற்போது முழுவதும் குணமாகியுள்ளார். பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் நடைபெற்ற உடற்தகுதிப் பரிசோதனையில் கலந்துகொண்டார். அதில் அவர் தேர்ச்சியடைந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளார். 

தில்லி அணி, ஷ்ரேயஸ் தலைமையில் கடந்த வருட ஐபிஎல் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது.  இந்த வருடம் அந்த அணி ரிஷப் பந்த் தலைமையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தற்போது, ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் அணியில் இடம்பெறவுள்ளதால் தில்லி கேபிடல்ஸின் கேப்டனாக யார் செயல்படப்போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஷ்ரேயஸ் ஐயர், ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுவிட்ட நிலையில் தில்லி கேபிடல்ஸ் அணியினர், ஆகஸ்ட் 21 அன்று இந்தியாவிலிருந்து புறப்படுகிறார்கள். 

ஷ்ரேயஸ் ஐயரா, ரிஷப் பந்தா யார் கேப்டன் என்கிற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இதுபற்றி தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகி, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: தில்லியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சனிக்கிழமை புறப்படுகிறோம். சர்வதேச ஆட்டங்களில் விளையாடி வரும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணி வீரர்கள் வேறு தேதிகளில் அங்கு வந்து சேர்வார்கள். கேப்டன் விவகாரத்துக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.