சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா?: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதில்

இலங்கையில்  ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் திட்டமிட்டப்படி...

News image
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் (கோப்புப் படம்)
Updated On :24 ஆகஸ்ட் 2021, 6:49 am

DIN

இலங்கையில்  ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இலங்கையில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. செப்டம்பர் 3 முதல் ஒருநாள் ஆட்டங்கள் ஹம்பன்டோட்டாவில் நடைபெறுகின்றன. 

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக இந்தத் தொடர் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்தத் தொடர் நிச்சயம் நடைபெறும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹமித் ஷின்வாரி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் உரிய நேரத்தில் விமானம் கிடைத்த பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளார்கள். அதுவரை காபூலில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  20 வருடங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தலிபான்கள் முன்னுரிமை அளித்ததால் தற்போதைய அரசியல் சூழலால் கிரிக்கெட் செயல்பாடுகளுக்குப் பாதிப்பு நேராது  என அறியப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அலுவலகம் வழக்கம் போல இயங்கி வருகிறது. இந்த இரு காரணங்களாலும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் தொடருக்கு எவ்விதப் பாதிப்பும் நேராது எனக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.