யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்!
யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக ஃபெடரரும் நடாலும் டொமினி தீமும் அறிவித்தார்கள்.


இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். பிறகு முதல் சுற்று ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் விம்பிள்டன் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகினார். இந்தத் தோல்விகளால் செரீனாவின் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான காத்திருப்பு மீண்டும் தொடர்கிறது. கடைசி நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலும் தோற்றுள்ளார் செரீனா. இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகிய செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்தும் விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
சமீபத்தில் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக ஃபெடரரும் நடாலும் டொமினி தீமும் அறிவித்தார்கள். இதையடுத்து செரீனா வில்லியம்ஸும் விலகியுள்ளார்.
யு.எஸ். ஓபன் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...