கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோலியை ஆட்டமிழக்கச் செய்ய எளிய திட்டம்: போட்டு உடைத்த ராபின்சன்

இந்திய கேப்டன் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்வதற்கான எளிய திட்டத்தை இங்கிலாந்து இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் சனிக்கிழமை கூறினார்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 3:10 pm

DIN


இந்திய கேப்டன் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்வதற்கான எளிய திட்டத்தை இங்கிலாந்து இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் சனிக்கிழமை கூறினார்.

இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆலி ராபின்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பரிசளிப்பு விழாவில் ராபின்சன் கூறியது:

"இங்கிலாந்துக்கான எனது முதல் வெற்றியில் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது உண்மையில் எனது கனவு. இங்கு பந்துவீசுவதை முன்பே அனுபவித்திருக்கிறேன். சூழல்களைப் பயன்படுத்தியிருப்பது நல்லது. எனவே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து பந்துவீசி, அவரிடமிருந்து கற்றுக்கொள்வது பெருமைக்குரியது. அது எனது ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளது. தொடர்ந்து கற்றுக்கொண்டு, முடிந்தளவுக்கு சிறப்பாகப் பந்துவீச முயற்சிப்பேன்.

எனது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய பிறகு கோலி விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி. அவரை ஆட்டமிழக்கச் செய்வதற்கு எளிதான திட்டம்தான். 4-வது அல்லது 5-வது ஸ்டம்புகளில் அவர் பேட்டின் எட்ஜ் பகுதியில் வாங்குவார் என்ற நம்பிக்கையுடன் வெளியே திரும்புவது போன்று பந்தை வீச வேண்டும். அவர் அதையே செய்தார்."

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.