ஆஷஸ் டெஸ்ட்: 85 ஆண்டுகள் கழித்து சாதனை, மிட்சல் ஸ்டார்க் அசத்தல்
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 85 ஆண்டு கழித்து மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.


ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 85 ஆண்டு கழித்து மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி,.கேப்டனாக முதல் போட்டியிலேயே கமின்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
மேலும் , இந்த ஆட்டத்தின் முதல் பந்திலேயே இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்ஸை ஆஸி., பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் போல்ட் செய்து விக்கெட் எடுத்ததால் , 1936-ஆம் ஆண்டிற்குப் பின் 85 ஆண்டுகள் கழித்து ஆஷஸ் டெஸ்ட்டில் முதல் பந்தில் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்கிற சாதனையைப் புரிந்திருக்கிறார் மிட்சல் ஸ்டார்க்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...