இங்கிலாந்து அணியிலிருந்து திட்ட ஆலோசகரைத் தேர்வு செய்துள்ள கேகேஆர் அணி
லீமோனின் திறமையை ஐபிஎல் போட்டிக்கும் பயன்படுத்த முடிவு செய்து அவரைத் தேர்வு செய்துள்ளது...


இங்கிலாந்து அணியின் புள்ளியல் நிபுணராகப் பணியாற்றும் நாதன் லீமோனை அணியின் திட்ட ஆலோசகராகத் தேர்வு செய்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். இதனால் லீமோனின் திறமையை ஐபிஎல் போட்டிக்கும் பயன்படுத்த முடிவு செய்து அவரைத் தேர்வு செய்துள்ளது கேகேஆர் அணி. இங்கிலாந்து அணியில் 2009 முதல் பணியாற்றி வருகிறார் லீமோன்.
ஐபிஎல் நடைபெறும்போது இங்கிலாந்து அணியிலிருந்து விடுமுறை எடுத்துக்கொள்வார் லீமோன். மார்கனுடன் இணைந்து ஐபிஎல் போட்டிக்காக இந்தியாவில் பணியாற்றுவது அடுத்து நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு உதவும் என்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் இதற்குச் சம்மதித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணியில் பணியாற்றியுள்ளார் லீமோன்.
ஐபிஎல் 2020 போட்டியில் லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்தது கேகேஆர் அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...