வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதி: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2021, 5:19 am

DIN

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.  முதல் போட்டி வரும் 5 - ஆம் தேதியும், 2 - ஆவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 - ஆம் தேதியும் தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்டைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. 

இந்நிலையில் 2-வது டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல் டெஸ்டுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மைதானங்களில் 50% ரசிகர்களை அரசு அனுமதித்துள்ளது. இதனால் பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெறும் 2-வது டெஸ்டுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.