விவசாயிகள் போராட்டம் பற்றி விவாதித்தோம்: இந்திய வீரர்களின் ட்வீட்கள் குறித்து விராட் கோலி
இந்தப் பிரச்னை குறித்து அவரவர் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். அணியின் கூட்டத்தில் இதைப் பற்றி விவாதித்தோம்...


இந்திய அணியின் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் பற்றி விவாதித்ததாக கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியின் சிங்கு, டிக்ரி உள்ளிட்ட பல்வேறு எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடா்ந்து 2 மாதங்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
ஸ்வீடனைச் சோ்ந்த சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பா்க், பாடகியும் நடிகையுமான ரியானா உள்ளிட்ட பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். விவசாயிகள் போராட்டம் பற்றிய ஒரு செய்தியைப் பகிர்ந்து, இதைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பினார் ரியானா. இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் பாடகி ரியானாவின் கருத்துக்கு மறைமுக எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.
விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய வீரர்கள் ட்வீட்களை வெளியிட்டது குறித்து இந்திய கேப்டன் கோலி கருத்து தெரிவித்துள்ளார். நாளை டெஸ்ட் தொடர் தொடங்குவதால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் அதுபற்றி நாங்கள் (அணி வீரர்கள்) பேசிக்கொள்வோம். இந்தப் பிரச்னை குறித்து அவரவர் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். அணியின் கூட்டத்தில் இதைப் பற்றி விவாதித்தோம். அதன்பிறகு டெஸ்டுக்கான திட்டங்கள் குறித்து பேசினோம் என்றார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி வரும் 5 - ஆம் தேதியும், 2 - ஆவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 - ஆம் தேதியும் தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்டைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...