பந்த் முற்றிலும் மாறுபட்ட வீரர்: இங்கி. பந்துவீச்சாளர் பாராட்டு
ரிஷப் பந்த் முற்றிலும் மாறுபட்ட வீரர் என இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் டோம் பெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.


ரிஷப் பந்த் முற்றிலும் மாறுபட்ட வீரர் என இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் டோம் பெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 321 ரன்கள் பின்தங்கியுள்ளது. விக்கெட்டுகள் சரிந்தபோது புஜாரா நிதானமாக விளையாடி 73 ரன்களும், பந்த் அதிரடியாக விளையாடி 91 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் டோம் பெஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டம் முடிந்தவுடன் டோம் பெஸ் செய்தியாளர்களிடம் பேசியது:
"பந்த் முற்றிலும் மாறுபட்ட வீரர். அவர் தனித்துவமான இன்னிங்ஸை விளையாடினார். அவர் விளையாடிய விதம் உண்மையில் பயமில்லாத ஆட்டம்.
தற்போதைய நிலையில் ஆட்டம் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. இந்த முதல் இன்னிங்ஸை முடிப்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம். அவர்கள் எந்த நேரத்தில் முடிக்கிறார்கள், எந்த நிலையில் முடிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். களத்திலுள்ள இருவரும் பேட் செய்யக்கூடியவர்கள். ஆனால், நாங்கள் நல்ல நிலையில் உள்ளோம்."
91 ரன்கள் எடுத்திருந்தபோது டோம் பெஸ் பந்தை சிக்ஸருக்கு அனுப்ப முயற்சித்த ரிஷப் பந்த், ஜேக் லீச்சிடம் கேட்ச் ஆனார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...