நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பந்த் ஐபிஎல்-இல் விளையாடுகிறார் என நினைத்தேன்: இங்கி. பந்துவீச்சாளர் லீச்

ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடியதைப் பார்த்து அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறார் என நினைத்ததாக இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :9 பிப்ரவரி 2021, 10:53 am

DIN


ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடியதைப் பார்த்து அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறார் என நினைத்ததாக இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் தெரிவித்துள்ளார்.  

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ரிஷப் பந்த் ஆட்டம் குறித்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் பேசினார்.

அவர் கூறியது:

"பந்த் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறார் என நினைத்தேன். சுழற்பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் சவால்தான் இது. அந்த நாள் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், சக வீரர்கள் வலிமையாக இருக்க உதவினர்" என்றார் லீச்.

முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறி வந்த நிலையில், ஜேக் லீச் ஓவர்களில் பந்த் 4 சிக்ஸர்கள் அடித்து இங்கிலாந்தை மிரட்டினார். புஜாராவுடனான அந்த பாட்னர்ஷிப் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.