பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெசிஸ் ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2021, 6:22 am

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார்.

2012-13-ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன டு பிளெசிஸ், அறிமுக ஆட்டத்திலேயே பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி கடுமையாக முயற்சி செய்து ஆட்டத்தை டிரா செய்தார். 78 மற்றும் 110* ரன்கள் எடுத்ததால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். 36 வயது டு பிளெசிஸ், 69 டெஸ்டுகளில் விளையாடி, 10 சதங்கள், 21 அரை சதங்களுடன் 4163 ரன்கள் எடுத்துள்ளார். டி வில்லியர்ஸுக்குப் பிறகு 2016-ல் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஆனார். 36 டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கினார். கடந்த வருடம் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் 1-3 எனத் தோற்றதால் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். கேப்டனாக 18 வெற்றிகளும் 15 தோல்விகளையும் அடைந்துள்ளார். 

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார் டு பிளெசிஸ். 143 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள டு பிளெசிஸ், இந்த இரு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட முடிவெடித்துள்ளார்.  

அடுத்த இரு வருடங்களிலும் இரு டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே என்னுடைய கவனம் இதன்மீது திரும்பியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள டி20 போட்டிகளில் விளையாடி இதில் சிறந்து விளங்க ஆசைப்படுகிறேன். தற்போதைக்கு டி20 கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று டு பிளெசிஸ் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.