கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது மகள் ஹன்விகா குறித்து உருக்கமான பதிவொன்றை எழுதியுள்ளார்.
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர், மார்ச் 8 அன்று நிறைவுபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்தில் மார்ச் 12 முதல் 20 வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் புணே நகரில் மார்ச் 23 முதல் 28 வரை நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் நடராஜன் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய நான்கு மாதக் குழந்தை ஹன்விகா பற்றி ட்விட்டரில் நடராஜன் எழுதியதாவது:
எங்களுடைய குட்டி தேவதை ஹன்விகா. நீதான் வாழ்க்கையின் மிகச்சிறந்த பரிசு. உன்னால் தான் எங்களுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களைப் பெற்றோராகத் தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி லட்டு. உன்னை எப்போதும் விரும்புவோம் என்று கூறி தனது குடும்பத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 05-04-2026

பகல் கனவு பலிக்காது!

பொய்யடிமை இல்லாத புலவர்

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


