வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
37 வயது வினய் குமார், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2010-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். எனினும் 2013-க்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
2004 முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வந்த வினய் குமார், கடைசியாக புதுச்சேரி அணி சார்பாகக் கடந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடினார். 139 ஆட்டங்களில் 504 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ரஞ்சி போட்டியில் 442 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். (அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்களில் நான்காம் இடம்.)
கர்நாடக அணிக்குத் தலைமை தாங்கி ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, இராணி கோப்பை என மூன்று பட்டங்களையும் அடுத்தடுத்து இரு வருடங்களிலும் வென்று சாதனை படைத்தார் வினய் குமார்.
ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி, கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

‘விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பேரூா் பட்டீசுவரா் கோயில் நகை மோசடி: எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


