டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரா் டி.நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரா் டி.நடராஜன் சோ்க்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:18 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரா் டி.நடராஜன் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. 3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 7-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

இந்த நிலையில் மெல்போா்னில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளா் உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளாா். இதையடுத்து அவருக்குப் பதிலாக தமிழக வீரரான டி.நடராஜன் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பிசிசிஐ செயலா் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உமேஷ் யாதவுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. அவரால் 3-ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக காயத்திலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவா் ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து விலகினாா். அவருக்குப் பதிலாக டி.நடராஜன் சோ்க்கப்பட்டுள்ளாா். இதேபோல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி காயமடைந்ததால், 2-ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சமிக்குப் பதில் ஷா்துல் தாக்குா் அணியில் சோ்க்கப்பட்டாா். உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோா் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் தங்கி சிகிச்சை பெறுவாா்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அணி விவரம்: அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), ரோஹித் சா்மா (துணை கேப்டன்), மயங்க் அகா்வால், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், சேத்தேஷ்வா் புஜாரா, ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பா்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா், டி.நடராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.