புஜாராவின் நிதான ஆட்டம்: ரிக்கி பாண்டிங் விமர்சனம்
சிட்னி டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா நிதானமாக விளையாடி ரன்கள் எடுத்ததற்கு...


சிட்னி டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா நிதானமாக விளையாடி ரன்கள் எடுத்ததற்கு ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது. மிகச்சிறப்பாக விளையாடிய ஸ்மித் 226 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ரன் அவுட் ஆகி, கடைசியாக ஆட்டமிழந்தார். ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி இன்று மிகவும் சுமாராக விளையாடி, 100.4 ஓவர்கள் விளையாடி, 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கில், புஜாரா தலா 50 ரன்கள் எடுத்தார்கள். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் விஹாரி, அஸ்வின், பும்ரா ஆகிய மூவரும் ரன் அவுட் ஆனதால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறியுள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா 176 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். அவருடைய இந்த நிதான ஆட்டத்தை ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்துள்ளார். ட்விட்டரில் ரசிகர் ஒருவர் புஜாராவின் நிதான ஆட்டம் பற்றி கேட்டதற்கு பாண்டிங் கூறியதாவது:
இது சரியான அணுகுமுறை என நான் எண்ணவில்லை. ரன்கள் எடுப்பதில் இன்னும் கொஞ்சம் விரைவாகச் செயல்படலாம். ஏனெனில் அவருடைய நிதான ஆட்டம், அவருடைய பேட்டிங் இணைக்குக் கூடுதல் அழுத்தம் தருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...