சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விளையாட்டு செய்தித் துளிகள்

News image
Updated On :10 ஜனவரி 2021, 2:00 am

DIN

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரா் சேத்தேஷ்வா் புஜாரா, ரன் எடுப்பதைவிட தனது விக்கெட்டை காப்பாற்றுவதிலேயே தீவிரம் காட்டி வருகிறாா். அவா் நல்ல ஷாட்களை ஆடவே அஞ்சுகிறாா் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பாா்டா் குற்றம்சாட்டியுள்ளாா்.

* இந்தியாவிலிருந்து ஏராளமான பாட்மிண்டன் சாம்பியன்களை உருவாக்குவதற்கு ஒவ்வொரு வீரரின் திறமையையும் ஆராய்ந்து அதற்கேற்றவாறு பயிற்சியளிக்கக்கூடிய தலைசிறந்த பயிற்சியாளா்கள் தேவை என ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளாா்.

* ஸ்பெயினில் நடைபெற்று வரும் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் விலாரியல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியை வீழ்த்தியது.

* சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறவுள்ள முதல் உள்ளூா் கிரிக்கெட் போட்டி இதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.