சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

​ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் 14-வது ஐபில் சீசனின் ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஜனவரி 2021, 12:51 pm

DIN


ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் 14-வது ஐபில் சீசனின் ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட விவாதத்துக்குப் பிறகு பிசிசிஐயிடம் பட்டியலை சமர்பிப்பதற்கான கடைசி நாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:

"ஆம், ஸ்மித் விடுவிக்கப்பட்டார். இதுபற்றி ஆலோசனைகள் நடைபெற்றன. இன்றுதான் அவரை விடுவிப்பதாக முடிவெடுக்கப்பட்டது."

கடந்த ஐபிஎல் சீசனில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. அவரும் பேட்டிங்கில் 14 ஆட்டங்களில் விளையாடி 3 அரைசதங்கள் உள்பட 311 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதுவரை விளையாடியுள்ள ஐபிஎல் சீசன்களில் இதுவே ஸ்மித்தின் குறைந்தபட்ச பேட்டிங் சராசரி.

இதனால், புதிய தலைமையுடன் களமிறங்க ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.