இந்தியா - இங்கிலாந்து தொடர்: சென்னை டெஸ்டுகளுக்கு இந்திய நடுவர்கள் நியமனம்!

சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்டுகளுக்கான நடுவர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்டுகளுக்கான நடுவர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல்  9 வரையும், பிப்ரவரி 13 முதல் 17 வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28 வரையும், கடைசி டெஸ்ட் மாா்ச் 4 முதல் 8 வரையும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன. 

சென்னையில் இந்திய, இங்கிலாந்து அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் பணியாளர்களும் போட்டி நடுவர்களும் ஆறு நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

வழக்கமாக டெஸ்ட் ஆட்டங்களில் வெளிநாட்டு நடுவர்களே பணிபுரிவார்கள். ஆனால் கரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு உள்ளூர் நடுவர்களே தற்போது பணியாற்றி வருகிறார்கள். இதனால் இந்தியா - இங்கிலாந்து தொடர்களிலும் இந்திய நடுவர்களே பணியாற்றவுள்ளார்கள்.

சென்னை டெஸ்டுகளுக்கு அனில் செளத்ரி, விரேந்தர் சர்மா, நிதின் மேனன் ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது. பிப்ரவரி 5 அன்று சென்னையில் தொடங்கும் முதல் டெஸ்ட், நிதின் மேனனுக்கு 4-வது டெஸ்டாகும். மற்ற இருவரும் முதல்முறையாக டெஸ்டுகளில் நடுவர்களாக அறிமுகம் ஆகவுள்ளார்கள். முதல் டெஸ்டுக்கு சம்சுதீன் 3-வது நடுவராக இருப்பார். முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் டெஸ்ட் தொடரின் போட்டி நடுவராகப் பணியாற்றுவார் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com