இந்திய அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் ஓய்வு அறிவிப்பு
மொத்தமே மூன்று சர்வதேச ஆட்டங்களில் விளையாடினாலும் முதல்தர கிரிக்கெட்டில் தான் அதிகம் சாதித்துள்ளார்...


இந்திய அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
36 வயது பங்கஜ் சிங், இந்திய அணிக்காக இரு டெஸ்டுகளிலும் ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் விளையாடியுள்ளார். 2007-08 ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணிக்குத் தேர்வான பங்கஜ் சிங், 2014 இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இரு ஆட்டங்களில் விளையாடினார். 2010-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்திலும் விளையாடியுள்ளார்.
மொத்தமே மூன்று சர்வதேச ஆட்டங்களில் விளையாடினாலும் முதல்தர கிரிக்கெட்டில் தான் அதிகம் சாதித்துள்ளார் பங்கஜ் சிங். 117 முதல்தர ஆட்டங்களில் 472 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரஞ்சி கோப்பைப் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையை 2019-ல் பெற்றார். ராஜஸ்தான் அணி 2010-11, 2011-12 என அடுத்தடுத்து ரஞ்சி கோப்பையை வென்றபோது அந்த அணியில் பங்கஜ் சிங் இடம்பெற்றிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...