பரோடா அணியிலிருந்து விலகினார் தீபக் ஹூடா
கேப்டன் கிருணால் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பரோடா அணியிலிருந்து விலகினார் தீபக் ஹூடா.


கேப்டன் கிருணால் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பரோடா அணியிலிருந்து விலகினார் தீபக் ஹூடா.
சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டியில் பரோடா அணியின் கேப்டன் கிருணால் பாண்டியாவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தீபக் ஹூடா அணியில் இருந்தும் கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் வெளியேறினார். இதனால் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கிருணால் பாண்டியா தன்னை அவமரியாதை செய்ததாக தீபக் ஹூடா குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பரோடா அணியிலிருந்து தீபக் ஹூடா விலகியுள்ளார். ராஜஸ்தான் அணியில் அவர் விளையாடுவதற்கு பரோடா கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்துள்ளது. பரோடா அணிக்காக 46 முதல்தர ஆட்டங்களில் தீபக் ஹூடா விளையாடியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் தீபக் ஹூடா இந்த வருடப் போட்டியில் 8 ஆட்டங்களில் 1 அரை சதத்துடன் 116 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 143.20.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...