கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பேட்டிங் பயிற்சியில் விராட் கோலி! (விடியோ)

​காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வலைப்பயிற்சி மேற்கொள்ளும் விடியோ வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூலை 2021, 2:22 pm

DIN


காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வலைப்பயிற்சி மேற்கொள்ளும் விடியோ வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பு டர்ஹமில் கவுன்டி செலக்ட் XI-க்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே காயம் காரணமாக ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தின் 2-வது நாள் உணவு இடைவேளையில் இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதன் விடியோ தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் பரலாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.