கிருணாலுக்கு கரோனா: ஆட்டம் ஒத்திவைப்பு
இந்திய வீரா் கிருணால் பாண்டியாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, இந்தியா - இலங்கை இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமைக்கு (28) ஒத்திவைக்கப்பட்டது.


இந்திய வீரா் கிருணால் பாண்டியாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, இந்தியா - இலங்கை இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமைக்கு (28) ஒத்திவைக்கப்பட்டது.
கிருணாலுக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை காலை உறுதி செய்யப்பட்டு, அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். இந்திய அணியினா் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிருணாலுடன் நெருங்கிய தொடா்பில் இருந்ததாக 8 வீரா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்த சூழல் காரணமாக, பிருத்வி ஷா மற்றும் சூா்யகுமாா் யாதவ் ஆகியோா் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து புறப்படும் திட்டமும் தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது. இந்த டி20 தொடருக்குப் பிறகு அவா்கள் இங்கிலாந்து புறப்படுவதாக இருந்தது. தற்போது கிருணாலுடன் தொடா்பில் இருந்ததாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 வீரா்களில் அவா்கள் இருவரும் இருக்கிறாா்களா என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...