ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஆசிய குத்துச்சண்டை: தங்கம் வென்ற இந்திய வீரர் சஞ்சீத்

துபையில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சஞ்சீத் தங்கம் வென்றுள்ளார். 

News image
Updated On :1 ஜூன் 2021, 6:51 am

DIN

துபையில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சஞ்சீத் தங்கம் வென்றுள்ளார். 

ஆசிய குத்துச்சண்டை போட்டி தில்லியில் மே 21 முதல் 31 வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும் இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை போட்டி தில்லியில் நடைபெறுவதற்குப் பதிலாக துபையில் நடைபெற்றது. 

ஆடவர் 91 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சஞ்சீத், 2016 ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற கஸகஸ்தானின் வாஸ்ஸில்லி லெவிட்டை 4-1 என்கிற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார். 

இதற்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியாவின் பூஜா ராணி, மகளிர் 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். 

இதையடுத்து ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி இரு தங்கங்கள் உள்பட 15 பதக்கங்களை வென்றுள்ளது. இதற்கு முன்பு 2019-ல் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி 13 பதக்கங்களை வென்றது. இந்தமுறை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப் பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.