பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

முதல் பந்திலேயே ரூட் அவுட்: லார்ட்ஸில் மிரட்டும் நியூசி. பந்துவீச்சாளர்கள்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் திணறி வருகிறது.

News image
Updated On :5 ஜூன் 2021, 12:37 pm

DIN


நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் திணறி வருகிறது.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்கத்தில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் மற்றும் கேப்டன் ஜோ ரூட் பாட்னர்ஷிப் அமைத்தனர். 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் அரைசதம் அடித்து 59 ரன்களுடனும், ரூட் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.

முதல் பந்திலேயே ரூட் அவுட்:

இந்த நிலையில் 4-ம் நாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே கைல் ஜேமிசன் வேகத்தில் ரூட் (42) ஆட்டமிழந்தார்.

சௌதி ஆதிக்கம்:

இதன்பிறகு, டிம் சௌதி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.

Story image

ஆலி போப் 22 ரன்களுக்கு டிம் சௌதி வேகத்தில் வீழ்ந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிரேசி ரன் ஏதும் எடுக்காமல் சௌதியிடம் வீழ்ந்தனர்.

பெவிலியனுக்குத் திரும்பும் லாரன்ஸ்..

பெவிலியனுக்குத் திரும்பும் லாரன்ஸ்..

இதனால், அந்த அணி 140 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து, பர்ன்ஸ் மற்றும் ஆலி ராபின்சன் நிதானம் காட்டத் தொடங்கினர். 4-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.

4-ம் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 72 ரன்களுடனும், ராபின்சன் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.