டிரா ஆன லார்ட்ஸ் டெஸ்ட்: 5-ம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 
கான்வே
கான்வே

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் நடைபெற்றது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் பிரேசி, ஆலி ராபின்சன் மற்றும் நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே என மூன்று வீரர்கள் இந்த டெஸ்டில் அறிமுகமானார்கள். . 
 
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கான்வே 200 ரன்களும் நிகோல்ஸ் 61 ரன்களும் எடுத்தார்கள். ஆலி ராபின்சன் 4 விக்கெட்டுகளும் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 101.1 ஓவர்களில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பர்ன்ஸ் 132 ரன்கள் எடுத்தார். டிம் செளதி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனிடையே 3-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்தது.

நியூசிலாந்து அணி, 2-வது இன்னிங்ஸில் 52.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி, 70 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்ததால் முதல் டெஸ்ட் டிரா ஆனது. சிப்லி 60 ரன்கள் எடுத்தார். 

இரட்டைச் சதம் எடுத்த நியூசி. வீரர் கான்வே, ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2-வது டெஸ்ட், செளதாம்ப்டனில் ஜூன் 18 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com