பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

News image
Updated On :9 ஜூன் 2021, 12:01 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட், பிர்மிங்ஹமில் நாளை தொடங்குகிறது.

காயம் காரணமாக நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சாண்ட்னர் ஏற்கெனவே 2-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டாம் லதம் கேப்டனாகச் செயல்படவுள்ளார். இதனால் நியூசிலாந்து அணியில் வில் யங் இடம்பெறவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.