தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இந்திய டெஸ்ட் அணியில் விரைவில் மாற்றம் : விராட் கோலி

இந்திய டெஸ்ட் அணியில் விரைவில் மாற்றம் ஏற்படும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி

News image
Updated On :24 ஜூன் 2021, 10:41 am

DIN

இந்திய டெஸ்ட் அணியில் விரைவில் மாற்றம் ஏற்படும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் 144 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது நியூசிலாந்து.

தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கோலி கூறியதாவது:

இந்திய அணியில் இடம்பெறக் கூடிய வீரர்கள் குறித்து மீண்டும் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். அணியைப் பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என முடிவெடுப்போம். ஒரே மாதிரியாக அணியைத் தேர்வு செய்யும் நடைமுறையைத் தொடர மாட்டோம்.

அடுத்த திட்டத்துக்காக ஒரு வருடம் வரை காத்திருக்க மாட்டோம். எங்கள் வெள்ளைப் பந்து அணியில் ஏராளமான வீரர்கள் திறமையை வெளிப்படுத்த தயாராகவும் நம்பிக்கையுடனும் உள்ளார்கள். அதேபோல டெஸ்ட் அணியையும் தயார் செய்ய வேண்டும். அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் சரியாக இருப்பார்கள், துணிச்சலுடன் சவாலை எதிர்கொள்வார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். சரியான மனநிலையுடன் உள்ள வீரர்களை அணிக்குக் கொண்டு வர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.