ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பந்த், ஜடேஜாவுக்குப் பின்னடைவு
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆல்-ரௌண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கடந்த வாரம் முதலிடத்தைப் பிடித்த இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மீண்டும் இரண்டாவது இடத்துக்கு சரிந்துள்ளார்.


ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆல்-ரௌண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கடந்த வாரம் முதலிடத்தைப் பிடித்த இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மீண்டும் இரண்டாவது இடத்துக்கு சரிந்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் (384 புள்ளிகள்) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜடேஜா 377 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் (759 புள்ளிகள்) 7-வது இடத்துக்கு சரிந்துள்ளார். ரோஹித் சர்மா (759 புள்ளிகள்) தொடர்ந்து 6-வது இடத்தில் நீடிக்கிறார். கேப்டன் விராட் கோலி 812 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே முதல் 10-இடங்களில் இடம்பிடித்துள்ளார். அவர் 865 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அரைசதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...