ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸுக்கான அட்டவணை!
2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 5 ஆட்டங்களை மும்பையில் விளையாடுகிறது.


2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 5 ஆட்டங்களை மும்பையில் விளையாடுகிறது.
2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணையை பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. கடந்த ஐபிஎல் சீசன் கரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மிகுந்த கட்டுப்பாட்டுகளுடன் ஐபிஎல் இந்தியா திரும்புகிறது.
ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால், எந்தவொரு ஐபிஎல் அணிக்கும் அவர்களது சொந்த ஊரில் ஆட்டம் ஒதுக்கப்படவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 5 லீக் ஆட்டங்களை மும்பையிலும், அடுத்த 4 ஆட்டங்களை தில்லியிலும், பெங்களூருவில் 3 ஆட்டங்களிலும், கடைசி 2 ஆட்டங்களை கொல்கத்தாவிலும் விளையாடுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கான முழு அட்டவணை:
| தேதி | நேரம் | இடம் | அணிகள் | ||
| 1. | ஏப்ரல் 10 | இரவு 7.30 | மும்பை | சென்னை சூப்பர் கிங்ஸ் | டெல்லி கேபிடல்ஸ் |
| 2. | ஏப்ரல் 16 | இரவு 7.30 | மும்பை | பஞ்சாப் கிங்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| 3. | ஏப்ரல் 19 | இரவு 7.30 | மும்பை | சென்னை சூப்பர் கிங்ஸ் | ராஜஸ்தான் ராயல்ஸ் |
| 4. | ஏப்ரல் 21 | இரவு 7.30 | மும்பை | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| 5. | ஏப்ரல் 25 | பிற்பகல் 3.30 | மும்பை | சென்னை சூப்பர் கிங்ஸ் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு |
| 6. | ஏப்ரல் 28 | இரவு 7.30 | தில்லி | சென்னை சூப்பர் கிங்ஸ் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
| 7. | மே 1 | இரவு 7.30 | தில்லி | மும்பை இந்தியன்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| 8. | மே 5 | இரவு 7.30 | தில்லி | ராஜஸ்தான் ராயல்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| 9. | மே 7 | இரவு 7.30 | தில்லி | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| 10. | மே 9 | பிற்பகல் 3.30 | பெங்களூரு | சென்னை சூப்பர் கிங்ஸ் | பஞ்சாப் கிங்ஸ் |
| 11. | மே 12 | இரவு 7.30 | பெங்களூரு | சென்னை சூப்பர் கிங்ஸ் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
| 12. | மே 16 | இரவு 7.30 | பெங்களூரு | சென்னை சூப்பர் கிங்ஸ் | மும்பை இந்தியன்ஸ் |
| 13. | மே 21 | இரவு 7.30 | கொல்கத்தா | டெல்லி கேபிடல்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| 14. | மே 23 | இரவு 7.30 | கொல்கத்தா | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | சென்னை சூப்பர் கிங்ஸ் |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...