இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இலக்கை விரட்டும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்கள்: இந்திய வீராங்கனை மந்தனா உலக சாதனை!

ஆடவர், மகளிர் என இரு தரப்பு கிரிக்கெட் ஆட்டங்களிலும் வேறு யாரும் இந்தச் சாதனையை நிகழ்த்தியதில்லை. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:41 pm

DIN

இலக்கை விரட்டும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வென்றுள்ளது. லக்னௌவில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லாரா குட்ஆல் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் ஜூலான் கோஸ்வாமி 4 விக்கெட்டுகளையும் ராஜேஸ்வரி 3 விக்கெட்டுகளையும் மன்சி ஜோஷி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதையடுத்து விளையாடிய இந்திய மகளிர் அணி இலக்கை எளிதாக விரட்டி வெற்றியடைந்தது. 28.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மந்தனா 64 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் பூனம் ராவுத் 62 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்த ஆட்டத்தில் அரை சதமெடுத்த ஸ்மிரிதி மந்தனா, இலக்கை விரட்டும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்கள் எடுத்துள்ளார். ஆடவர், மகளிர் என இரு தரப்பு கிரிக்கெட் ஆட்டங்களிலும் வேறு யாரும் இந்தச் சாதனையை நிகழ்த்தியதில்லை.

ஒருநாள் ஆட்டத்தில் இலக்கை விரட்டும்போது மந்தனாவின் கடைசி 10 இன்னிங்ஸ் ரன்கள்

80* (சமீபத்திய ஆட்டம்)  
74  
63   
90*   
105
73*  
53*  
86   
52 
57

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.