எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணிக்குப் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளர்

பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர்...

News image

பஞ்சாப் அணி

Updated On :13 மார்ச் 2021, 1:25 pm IST


பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் டேமின் ரைட் தேர்வாகியுள்ளார். 

ஐபிஎல் போட்டியில் கடந்த 13 வருடங்களில் இருமுறை மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் ஆறாம் இடத்தைப் பிடித்தது. 2008, 2014 ஆகிய வருடங்களில் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதால் அதன் பெயரை மாற்ற அணி உரிமையாளர்களான நெஸ் வாடியா, நடிகை ப்ரீத்தி ஜிந்தா, கர்ண் பால், மோஹித் பர்மன் ஆகியோர் முடிவு செய்தார்கள். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் பஞ்சாப் கிங்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் டேமின் ரைட், பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தேர்வாகியுள்ளார். ஹோபர் ஹரிகேன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் வங்கதேசத்தின் யு-19 அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 123 ஆட்டங்களில் 406 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் டேமின் ரைட். 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் கிரிக்கெட் இயக்குநராகவும் அனில் கும்ப்ளே உள்ளார். ஜாண்டி ரோட்ஸ் (ஃபீல்டிங்), வாசிம் ஜாபர் (பேட்டிங்), ஆண்டி பிளவர் (உதவிப் பயிற்சியாளர்) ஆகியோரும் பயிற்சியாளர் குழுவில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.