யாரும் அடிக்காத மகத்தான ஷாட்: ரிஷப் பந்தின் ரிவர்ஸ் ஸ்கூப் பற்றி பீட்டர்சன்

கிரிக்கெட்டில் இதுவரையில் யாரும் அடிக்காத மிகச்சிறந்த ஷாட் ஒன்றை ரிஷப் பந்த் அடித்துள்ளார்.
யாரும் அடிக்காத மகத்தான ஷாட்: ரிஷப் பந்தின் ரிவர்ஸ் ஸ்கூப் பற்றி பீட்டர்சன்

ஆர்ச்சர் பந்துவீச்சில் ரிஷப் பந்த் அடித்த ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டைப் பாராட்டி முன்னாள் வீரர் பீட்டர்சன் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க வீரா் ரோஹித் சா்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷிகா் தவன் சோ்க்கப்பட்டாா். இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தோ்வு செய்தது. 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. பின்னா் ஆடிய இங்கிலாந்து அணி 15.3 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. டேவிட் மலான் 20 பந்துகளில் 1 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 24, ஜானி போ்ஸ்டோவ் 17 பந்துகளில் 2 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அட்டகாசமான ரிவர்ஸ் ஸ்கூப் அடித்தார் ரிஷப் பந்த். அந்த ஷாட், சிக்ஸராக மாறியது. இதையடுத்து இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் ட்விட்டரில் கூறியதாவது:

கிரிக்கெட்டில் இதுவரையில் யாரும் அடிக்காத மிகச்சிறந்த ஷாட் ஒன்றை ரிஷப் பந்த் அடித்துள்ளார். மணிக்கு 90 மைல் வேகத்தில் ஆர்ச்சர் வீசிய புதிய பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து அது சிக்ஸர் ஆகியுள்ளது என்று வியந்து பாராட்டியுள்ளார். 

பீட்டர்சன் போல லக்‌ஷ்மண், யுவ்ராஜ் சிங் ஆகியோரும் ரிஷப் பந்தைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார்கள். நேற்றைய ஆட்டத்தில் 23 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்கள் எடுத்தார் ரிஷப் பந்த். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com