துப்பாக்கி சுடுதல் போட்டி: இரு இந்திய வீரர்களுக்கு கரோனா
சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் யாஷஸ்வினி தேஸ்வால், மானு பாக்கர் ஆகியோர் முறையே தங்கள் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
ஆண்கள் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் செளரப் செளத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 21) துப்பாக்கி சுடுதல் வீரர்களில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செயப்பட்டுள்ளதாக சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வீரர்கள் இருவம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...